திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டு ஏற்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவர் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டவர்களின் வங்கி கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஜாபர் சாதிக் திமுகவின் முன்னாள் நிர்வாகியாக இருந்ததால், அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.