சென்னையின் 5 கடற்கரையின் தூய்மை பணிகள்: தனியாருக்கு விட முடிவு..!

Mahendran

வியாழன், 27 பிப்ரவரி 2025 (18:58 IST)
சென்னையில் மெரினா கடற்கரை உட்பட ஐந்து கடற்கரைகளின் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா  தலைமையில் இன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர், ஆணையர் உள்பட பலர் பங்கேற்றனர். இன்றைய கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
அதில், சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர் மற்றும் புது கடற்கரைகளின் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
மெரினா கடற்கரையை ஒரு வருட காலத்திற்கு தூய்மை செய்ய சுமார் ஏழு கோடி ரூபாய் தோராய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற நான்கு கடற்கரைகளுக்கும் ஒரு வருட தூய்மை பணிக்காக சுமார் 4 கோடி ரூபாய்க்கும் தோராய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்