கள்ளக்காதலி நடத்தையில் சந்தேகம்! குத்தி விட்டு தப்பியபோது கார் விபத்து! - திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

Prasanth Karthick

திங்கள், 9 டிசம்பர் 2024 (09:47 IST)

திருவண்ணாமலையில் கள்ளக்காதலியை சந்தேகப்பட்டு குத்திவிட்டு தப்பிய நபரும் கார் விபத்தில் மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

விழுப்புரம் அடுத்த அரகண்டநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் சத்யா. இவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளிலேயே கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகள், மகனுடன் வசித்து வந்துள்ளார். வீட்டு வேலை செய்து பிழைத்து வந்த சத்யாவுக்கும், திருபாலந்தலை சேர்ந்த முருகன் என்ற கூலித்தொழிலாளிக்கும் சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இது கள்ளக்காதலாக மலர்ந்த நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சமீபமாக சத்யா நடவடிக்கைகள் மீது முருகனுக்கு சந்தேகம் எழுந்த நிலையில் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 
 

ALSO READ: ரவுடியை துப்பாக்கியால் சுட்ட போலீசார்.. அதிகாலையில் சென்னையில் பரபரப்பு..!
 

தனது கள்ளக்காதலி சத்யாவின் நடத்தையில் சந்தேகமடைந்த முருகன் ஆத்திரத்தில் சத்யாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு காரில் அவசரமாக தப்பி ஓடியுள்ளார். அந்த கார் திருக்கோவிலூர் - திருவண்ணாமலை சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரிலிருந்து அவரை மீட்கும்போது அவரை அவரே கத்தியால் குத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்