இந்த நிலையில், திருமண நாள் கொண்டாடும் தினத்தில் அதிகாலை தனது தாய், தந்தை, சகோதரி ஆகியோர் கொலை செய்யப்பட்டதாக அர்ஜூன் காவல்துறையில் புகார் அளித்தார். தான் நடைபயிற்சி முடித்து வீட்டுக்கு திரும்பிய போது மூவரும் இறந்து கிடந்ததாக அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை செய்த போது, வீட்டுக்குள் யாரும் நுழைந்ததாக தெரியவில்லை. இதனை அடுத்து அர்ஜூனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் கொடுத்ததை அடுத்து, ஒரு கட்டத்தில் மூவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
தனது தந்தை எப்போதும் தன்னிடம் கண்டிப்பாக இருப்பதாகவும், அதை தனது தாய் மற்றும் தங்கை வேடிக்கை பார்ப்பதாகவும் இதனால் ஆத்திரமடைந்து குடும்பம் முழுவதையும் கொலை செய்துவிட்டேன் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.