ரூ.1 நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த இயக்குனர் சுசி கணேசன்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (17:46 IST)
திருட்டுப்பயலே, கந்தசாமி உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் சுசிகணேசன் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவிஞர் லீலா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த இயக்குனர் சுசி கணேசன் விரைவில் லீலா மீது வழக்கு தொடரவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று  சென்னை உரிமையியல் நீதிமன்றத்திற்கு வந்த இயக்குனர் சுசிகணேசன், லீலா கணேசன் மீது ரூ.1 நஷ்டஈடு கோரி வழக்கு தொடரந்தார். இந்த வழக்கு இன்னும் ஒருசில நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'ஹம் ஆப் கோ ஹெயின் கோன்' பட நடிகர் அலோக் நாத், விண்டா நந்தா என்பவர் மீது ரூ.1 நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்