பெரியார் சிலையில் "கடவுள் இல்லை" வாசகம்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

திங்கள், 12 செப்டம்பர் 2022 (15:01 IST)
பெரியார் சிலையில் கடவுள் இல்லை என்ற வாசகம் இருப்பதை அடுத்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தற்போது சென்னையை சேர்ந்த பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகம் முழுவதிலுமுள்ள சிலைகளில் கடவுள் இல்லை என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது என்றும் அதற்கு தமிழக அரசு உதவி செய்கிறது என்றும் அந்த வாசகத்தை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்
 
இந்த மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட், ‘ பெரியார் சிலையில் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்க கோரி உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு மற்றும் திராவிட கழக தலைவர் கி வீரமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்