கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (16:58 IST)
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே நடந்த விசாரணை முறையாக விசாரிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது 
 
இதனையடுத்து இந்த வழக்கு ஆரம்பத்திலிருந்து மீண்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கை காவல்துறையினர் மறுவிசாரணை செய்ய தடை விதிக்க வேண்டும் என அனுபவ் ரவி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்
 
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் இது குறித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் காவல்துறை மறு விசாரணைக்கு தடை இல்லை என உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் அனுபவ் ரவியின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து கொடநாடு கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்