ஓபிஎஸ், இபிஎஸ் என்றால் என்ன? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி

புதன், 4 ஜனவரி 2023 (16:51 IST)
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஓபிஎஸ் இபிஎஸ் என்றால் என்ன என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
அதிமுக பொதுக்குழு சமீபத்தில் நடந்த நிலையில் இந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
 
இன்றைய விசாரணையின்போது இருதரப்பு வாதங்களிலும் ஓபிஎஸ் இபிஎஸ் என்று வழக்கறிஞர்கள் கூறப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறுக்கிட்டு ஓபிஎஸ் இபிஎஸ் என்றால் என்ன என கேள்வி கேட்டதை அடுத்து ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் ஓபிஎஸ் இபிஎஸ் என சுருக்கமாக கூறுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நீதிபதிகள் விவாதத்தை தொடருமாறு கூறியதாக தெரிகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்