அதிமுக ஈபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் அளித்த அதிர்ச்சி!

வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:47 IST)
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் கிடையாது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி அணி இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் என குறிப்பிட்டு எழுதப்பட்டிருப்பது எடப்பாடிபழனிசாமி அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அதிமுகவுக்கு எழுதிய கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் என குறிப்பிட்டு எழுதியுள்ளார் என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட வில்லை என்பதால் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் ஓபிஎஸ் அணியினர் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்