இரண்டு ஆண்டு அவகாசம் தேவையா? ஆளுனர் மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்

செவ்வாய், 3 நவம்பர் 2020 (13:14 IST)
பேரறிவாளனின் கருணை மனு மீது முடிவு எடுக்க 2 ஆண்டு அவகாசம் தேவையா? என தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பேரறிவாளன் தரப்பில் கருணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது முடிவு எடுக்க தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்தது
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மனு மீது முடிவு எடுக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறார் கவர்னர். இதனை அடுத்து இந்த மனு மீது விரைவில் முடிவெடுக்க கவர்னரை அறிவுறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் மனு மீது முடிவெடுக்க இரண்டு ஆண்டுகள் தேவையா என்று கவர்னருக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசு ஏன் ஆளுனருக்கு ஆலோசனை வழங்கவில்லை என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்