பேனா நினைவு சின்ன வழக்கு: உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (15:37 IST)
சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் இதற்கு சமீபத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 
 
கே கே ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது போன்ற மனுக்களை பொதுநல மனுவாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்