ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்.. என்ன காரணம்?

Siva

செவ்வாய், 25 மார்ச் 2025 (11:11 IST)
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 
 
அவர் வரும் 27ம் தேதி கோவையில் அமைந்துள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் நேரில் ஆஜராகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து சுதாகரன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்த பின்னணியில் சுதாகரனுக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுவரை, இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 250க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் மகன் சுதாகரனை விசாரிக்க எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்