காவலர் கொலை வழக்கு.. கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்..!

Siva

திங்கள், 24 மார்ச் 2025 (09:32 IST)
மதுரை அருகே தனிப்படை காவலர் மலையரசன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு  கைது செய்துள்ளனர்.
 
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள முக்குளம் அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த மலையரசன்  சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன், அவரது மனைவி பாண்டிச்செல்வி ஒரு கார் விபத்தில் காயமடைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
 
மனைவியின் மருத்துவ ஆவணங்களை பெறுவதற்காக திங்கள்கிழமை மதுரைக்கு சென்ற மலையரசன், பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, செவ்வாய்கிழமை இரவு மதுரை சுற்றுச் சாலையில் ஈச்சனேரி கண்மாய் அருகே எரிந்து கிடந்த அவரது உடல் மீட்கப்பட்டது.
 
இந்த கொலை தொடர்பாக, மூவேந்திரன் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மதுரை அருகே இன்று காலை அவரை சுட்டு கைது செய்துள்ளனர். காயமடைந்த மூவேந்திரனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் டிஸ்சார்ஜ் ஆனவுடன் அவரிடம் விசாரணை செய்யப்படும் என தெரிகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்