தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (20:16 IST)
அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் இருந்து குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசுவதால் தமிழகத்தில் வரும் 48 மணி நேரத்திற்கு வெப்பம் தனியும்" என்று கூறினார்.
 
இந்நிலையில், வேலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்