சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து பாதிப்பு..!

Mahendran
சனி, 1 ஜூன் 2024 (09:43 IST)
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் திடீரென மூன்று அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் அவ்வப்போது திடீர் திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டு வருகிறது என்றும் மெட்ரோ பணிகள் காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆற்காடு சாலையில் திடீரென 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்திய காவல்துறையினர் மாற்று வழியில் போக்குவரத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில நிமிடங்கள் கழித்து பள்ளம் ஏற்பட்ட பகுதியை மட்டும் மறித்து மீதமுள்ள பகுதியில் போக்குவரத்து தொடங்கியதாகவும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஆற்காடு சாலையில் திடீர் என பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பள்ளம் 3 அடி ஆழத்திற்கு இருப்பதாகவும் மெட்ரோ பணிகளால் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளத்தை நிரப்பும் பணிகள் தொடங்க இருப்பதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் வழக்கமான போக்குவரத்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்