சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து கூறிய போது, 'திமுகவும் தேசபக்தியும் எப்போதும் ஒன்று சேராது என்றும், திமுக பேச்சை யாரும் இனிமேல் மதிக்கமாட்டார்கள் என்|றும், திமுக கடந்த பல ஆண்டுகளாக பழைய கால அரசியலை நடத்தி வந்ததாகவும், ஆனால் தமிழகத்தில் இனிமேல் அந்த முறை செல்லுபடியாகாது என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளதாகவும், தமிழக இளைஞர்கள் படித்தவர்களாகவும் தேச பக்தி உணர்வு உள்ளவர்களாக உள்ளதால், இனிமேல் திமுகவின் தந்திரம் எடுபடாது என்று கூறினார்
மேலும் காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுகவிற்கு 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்த சுப்பிரமணியசுவாமி, சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் காஷ்மீர் மக்களும் இதனை ஏற்றுக்கொண்டு தற்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டதாகவும் கூறினார்.
இந்த விஷயத்தில் பாஜகவின் நடவடிக்கையில் நியாயம் இருப்பதாக கருதியே திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்பிக்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், ஆனால் திமுக கடைசி வரை இந்த மசோதாவை எதிர்த்து, தேசபக்திக்கு எதிரான கட்சி என்பதை வெளிப்படுத்தி உள்ளதாகவும் சுப்பிரமணியசாமி கூறினார்