சர்ச்சையில் மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ் - ஆசிரியர் சஸ்பெண்ட்..! தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்.!!

Senthil Velan
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (13:06 IST)
வேலூரில் பள்ளி சீருடையில் மாணவிகள் வளைகாப்பு செய்வது போன்று தத்ரூபமாக நடித்து, ரீல்ஸ் வெளியிட்ட விவகாரத்தில் ஆசிரியை ஒருவர்  பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து தலைமை ஆசிரியர் பிரேமாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில், மாணவிகள் சக மாணவிக்கு வளைகாப்பு செய்வதை போன்று நடித்து ரீல்ஸ் தயாரித்துள்ளனர். அதில் வளையல், பூ, சந்தனம், பன்னீர் உட்பட அனைத்துப் பொருட்களையும் வைத்து, மாணவிக்கு நலங்கு வைப்பது போன்று வீடியோ எடுத்து ரீல்ஸை உருவாக்கியுள்ளனர்.

வளைகாப்பிற்கு அழைப்பிதழ் தயார் செய்த மாணவிகள், அதில், தேதி, நேரம், இடம் உள்ளிட்டவற்றை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த ரீல்ஸ், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


ALSO READ: ஹேக் செய்யப்பட்டது உச்சநீதிமன்ற YouTube பக்கம்..! வழக்கு விசாரணை நேரலையில் பாதிப்பு..!!
 
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மாணவிகளின் வகுப்பு ஆசிரியை, பணி இடைநீக்கம் செய்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இதுகுறித்து தலைமை ஆசிரியர் பிரேமாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்