கிரிக்கெட் விளையாடியபோது மின்னல் தாக்கி 11ஆம் வகுப்பு மாணவன் பலி!

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (12:19 IST)
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதால் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு பள்ளியில் விளையாட்டு பாட வேலையின் போது மாணவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர் 
 
அப்போது கஜினி என்ற மாணவர் பந்து வீசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்
 
 இச்சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் வந்து தங்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது பெரும் சோகமாக இருந்தது.
 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவர் கழுத்தில் வெள்ளி செயின் போட்டிருந்த்தால் அதனால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்