கொரோனா பாதிப்பு அடைந்தவரின் வீட்டில் ஸ்டிக்கர்: சென்னை மாநகராட்சி

வியாழன், 6 ஏப்ரல் 2023 (08:22 IST)
கொரனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவரின் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நேற்று மீண்டும் தமிழகத்தில் 200 பேர்களை தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்பதும் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கான அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும், அதேபோல் கொரோனா  தொற்று பாதித்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளத்து.
 
முதல் கட்டமாக கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்