ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய இடைக்காலத் தடை: நீதிபதி அதிரடி!

திங்கள், 19 செப்டம்பர் 2016 (12:38 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ராம்குமார், நேற்று தற்கொலை செய்த கொண்டதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது.


 
 
அதனை தொடர்ந்து இன்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று கூறப்பட்டது. 
 
இந்நிலையில், ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு அவசர வழக்காக எடுக்கப்பட்டு இன்று 2.15 மணிக்கு விசாரிக்கப்பட உள்ளது. 
 
அதனால், ராம்குமார் உடலை பிரதே பரிசோதனை செய்ய  இடைக்காலத்தடை விதித்து நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்