அதிமுகவின் சார்பில் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்யவிருக்கும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது அதிமுக.
தேர்தல் நேரத்தில் கட்சிகளின் தேர்தல் செலவுகளை கணக்கிடும் தேர்தல் ஆணையம், ஒவ்வொரு கட்சியிலும் பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலையும் கேட்டுள்ளது. நட்சத்திர பேச்சாளர்களுக்கு ஆகும் பிரச்சார செலவும் கட்சிகளின் தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்யவிருக்கும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.