அதிமுக எம்பி மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்!

செவ்வாய், 23 மார்ச் 2021 (20:37 IST)

தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த அதிமுக எம்பி முகமது ஜான் அவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்ற செய்தியை சற்று முன் பார்த்தோம் 

 
இந்த நிலையில் அதிமுக எம்பி மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: அதிமுக எம்பி முகமது ஜான் திடீரென மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன், ஆழ்ந்த இரங்கல்.
 
மாநிலங்களவையில் தமிழகத்தின் குரலாக ஒலித்தவர் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் அதிமுகவினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ஆறுதல்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார் 
 
அதிமுக எம்பி ஆக இருந்த அரசியல் நாகரீகம் கருதி முகமது ஜான் மறைவு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளது பாராட்டும் வகையில் உள்ளது
 
 

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. முகமது ஜான் திடீரென்று மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஆழ்ந்த இரங்கல்!

மாநிலங்களவையில் தமிழகத்தின் குரலாய் ஒலித்தவர்!

அவரை இழந்து வாடும், குடும்பத்தினர், உறவினர்கள், அதிமுக-வினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம், ஆறுதல்!

— M.K.Stalin (@mkstalin) March 23, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்