சர்வாதிகாரத்தைக் கையில் எடுப்பேன் – மட்டன் பிரியாணி சாப்பிட்ட ஸ்டாலின் !

திங்கள், 11 நவம்பர் 2019 (09:13 IST)
கட்சியின் நலனுக்காக நான் சர்வாதிகாரத்தை கையில் எடுப்பேன் என பொதுக்குழுவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ’ இந்த பொதுக்குழுவில் நாம் அமர்ந்திருப்பதற்கு தொண்டர்கள்தான் காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்களெல்லாம் எவ்வளவோ அனுபவித்திருக்கிறீர்கள். ஆனால் பல லட்சம் தொண்டர்கள் இன்னும் ஒன்றும் அனுபவிக்கவில்லை. இடைத்தேர்தலில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளோம் என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தொண்டர்கள் விலகி நின்று விட்டார்கள். கட்சி நலனுக்காகச் சர்வாதிகாரத்தைக் கையிலெடுப்பேன் என்று நிர்வாகிகளிடம் குறிப்பிட்டேன். இப்போதும் அதையே சொல்லுகிறேன். இங்கே திடலில் அனைவருக்கும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்களோடு நானும் சாப்பிடுகிறேன்’ என கூறினார்.

மதிய உணவாக மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மட்டன் வறுவல் என அசைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ஸ்டாலினோடு சேர்ந்து கட்சி நிர்வாகிகள் மதிய உணவை சாப்பிட்டனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்