வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக கரூரில் பா.ம.க ஆலோசனை கூட்டம்

சனி, 9 நவம்பர் 2019 (18:32 IST)
கரூர் மாவட்ட பா.ம.க இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவகலத்தில் மாநில இளைஞர்கள் சங்க துணை தலைவர் மலை.முத்து தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர்கள் சங்க செயலாளர் பி.வி.செந்தில் கலந்து கொண்டார்.

இதில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக மருத்துவர் அன்புமணி ராமதாசின், அன்புமணியின் தங்கைகள் படை, தம்பிகள் படை, மாணவர் படை என்று  முப்படைகளை தயார் செய்து அவர்களை வரும் தேர்தல்களில் எவ்வாறு பணி செய்திட வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸரன் , கண்ணன் , சதீஸ், விஸ்வநாதன், ஜ.எம்.பாபு, யுவராஜ் , வரதன் , பாலசுப்ரமணி , முருகன்  உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்