கவர்னர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு: முக ஸ்டாலின் அறிவிப்பு!

திங்கள், 3 மே 2021 (07:37 IST)
கவர்னர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு: முக ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது அக்கட்சி மட்டும் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளதை அடுத்து தனித்து ஆட்சியைப் பிடிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது என்பதும், அதில் அதிமுக 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ’கொரோனா நிலைமையை கணக்கில் கொண்டு மிக எளிமையாக கவர்னர் மாளிகையில் பதவி ஏற்கப்படும் என்றும் பதவியேற்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் வாழ்த்து தெரிவித்த தேசிய தலைவர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் அதே நேரத்தில் வாழ்த்து தெரிவித்த தேசிய தலைவர்கள் எங்கள் ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் மேலும் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றி என்றும் அனைவருக்குமான பொது ஆட்சி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்