கடும் போட்டியில் வெற்றி: நண்பர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்- ரஜினிகாந்த் டுவீட்

ஞாயிறு, 2 மே 2021 (21:27 IST)
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

இந்நிலையில் திமுக வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் உறுதியாகியுள்ளதால் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு ,நாட்டின் உள்ள முக்கிய தலைவர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.  

தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நடைபெற்ற தமிழ்க சட்டமன்றத் தேர்தலில் கடும் போட்டியில் திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய நண்பர் மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பெரும் புகழும் பெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் எனத் தெரித்துள்ளார்.

pic.twitter.com/cuUjHru4kB

— Rajinikanth (@rajinikanth) May 2, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்