எம்.ஜி.ஆர் வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு 40 ஆண்டுகள் கழித்து தற்போது எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று நம்முடைய மாநிலத்திற்கு தொழில் துவங்கவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது – கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்.
கரூர் நகரில் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லாத நிலையில், பழைய அமராவதி பாலத்திலேயே பூங்கா ஒன்றினை அமைத்து அதிலும், நடைபாதையுடன் பூங்கா ஒன்றினை கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகத்துடன் கரூர் மாவட்ட நிர்வாகம் பணி செய்ய ஆயத்தமாகி, அதற்கான முழு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த பணிகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நேரில் ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, புதிய, அமராவதி பாலத்தினை கட்டிய பிறகு, பழைய பாலம் உபயோகமில்லாமல், இருந்த நிலையில், அதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு பூங்கா இல்லாததையடுத்து, கரூர் வைஸ்யா வங்கியின் சி.எஸ்.ஆர் தொகையுடன் ரூ 1 கோடியில், நடைபாதையுடன் கூடிய பூங்கா பொதுமக்கள் பயன்படுத்த நல்ல திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றதாகவும் இதனால் கரூர் மக்களுக்கு நல்ல பூங்கா பயனுள்ளதாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு., சென்னை விமான நிலையத்திலேயே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கு முன்னர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு, தற்போது நமது முதல்வர் அதே வழியில் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள நமது தமிழ் வாழ் மக்களிடமும், மேற்கிந்திய மக்களிடம் நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் படி பேசி, நிறைய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திட பயனுள்ள திட்டங்களை தீட்டியுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கரூர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவரும், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத்தலைவருமான ஏ.ஆர்.காளியப்பன் உடன் இருந்தார்.