சேம் டைமிங்... சேம் பாட்டு... எடப்பாடியாரை கலங்க விடும் ஸ்டாலின் - கமல்!!

வெள்ளி, 18 டிசம்பர் 2020 (11:42 IST)
எடப்பாடி பழனிச்சாமியை ஸ்டாலினும், கமல்ஹாசனும் ஒரே பாடலை பாடி கலாய்த்துள்ள சம்பவம் நடந்துள்ளது. 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலினும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் ஒரே பாடலை பாடி கலாய்த்துள்ள சம்பவம் நடந்துள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளன. 
 
இதனை ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சுமர்த்திக்கொள்வதும் கேலி செய்துக்கொள்வதும் என தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் எம்.ஜி.ஆரின் பாடலை பாடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கலாய்த்துள்ளனர்.
 
அதாவது, சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்! ஒரு மானமில்லை. அதில் ஈனமில்லை! அவர் எப்போதும் வால் பிடிப்பார் என பாடி கலாய்த்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்