சிவகாசி மாநகராட்சியில் நடந்த அதிமுக வேட்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொம்மை முதல்வரை போல செயல்படுவதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில் 8 மாதமாக திமுக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நமது ஆட்சியில் முடிவுற்ற திட்டங்களையே மீண்டும் தொடங்குகிறார். கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லி ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றிவிட்டார்கள். கொள்ளை அடிப்பதே இந்த அரசு பிரதானமாக செயல்படுகிறது.