விசாரணை அதிகாரியை கொல்ல முயன்ற வழக்கில் நடிகருக்கு முன் ஜாமீன்!

திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:37 IST)
நடிகை ஒருவரைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளிவந்திருக்கும் நடிகர் திலீப் மீது மற்றொரு வழக்கும் இப்போது பாய்ந்துள்ளது.

நடிகை பாலியல் வழக்கில் திலீப்பை கைது செய்யப்பட்ட திலீப், இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி ஒருவரை அவர் கொலை செய்ய முயன்றதாக மேலும் ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்பட்டு, அதற்காக அவர் கைது செய்யப்படலாம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்துக்கு செல்ல  நான்கு முறை அந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இன்று நடந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் இப்போது திலீப்புக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்