"எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்" - ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (16:07 IST)
முறைகேடு புகாரில் சிக்கியுள்ள எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


 

இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக வேந்தர் மூவிலஸ் 0மதனிடம் பணம் கொடுத்ததாகவும், ஆனால், தங்களுக்கு மருத்துவப்படிப்பில் இடமும் வழங்கப்படவில்லை, தாங்கள் கொடுத்த பணமும் இதுவரை திருப்பித் தரப்படவில்லை என்றும் கூறி சுமார் 50 பேர் சென்னை மாநகரக் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
 
ஆனால், தங்கள் குழுமத்துக்கும், வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எஸ்.ஆர்.எம் குழுமம் தலைவர் பாரிவேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
முன்பு, எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவுக்கு மதன் எல்லாமுமாக இருந்துள்ளார் மதன். மேலும், மதன் எழுதி வைத்துள்ள கடிதத்தில்,‘‘மருத்துவப் பட்டப்படிப்பு, மேற்படிப்பு ஆகியவற்றுக்கு நீட் நுழைவுத்தேர்வு உண்டு என்றாலும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 102 இடங்கள் நிரம்பிவிட்டன.
 
நான் அனுப்பிய பட்டியலிலுள்ள மருத்துவ மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் இடமளிக்க வேண்டும். அவர்களிடம் வாங்கிய பணம் முழுமையாக உங்களிடம் (பச்சமுத்து) கொடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
 
மருத்துவப் படிப்பில் சேர மாணவர்களை பிடித்து தருவதற்காக பல மாநிலங்களில் முகவர்களை மதன் நியமித்துள்ளார். இதற்காக மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் குறிப்பிட்ட தொகை மதனுக்கு கமிஷனாக வழங்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு காரணம் என்ன?
 
எனவே, இந்த விவகாரத்தில் இனி தாமதம் இன்றி பச்சமுத்து மற்றும் மதன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட வேண்டும்.
 
மேலும், பல்வேறு முறகேடுகள் மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்ட எஸ்ஆர்எம் குழும மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். அத்துடன் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
 
 
அடுத்த கட்டுரையில்