ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்,: பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி- அண்ணாமலை

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (14:30 IST)
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு எனத் தனியாக அறக்கட்டளை தொடங்கப்பட்டு நிதி சேகரிக்கபட்டு கோவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் ஜனவரியில் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
 
இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும், விவிஐபிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இந்த    நிலையில்,  அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள  ராமர் கோயில் குடமுழுக்கிற்காக, சமீபத்தில்  இலங்கை நாட்டிலிருந்து விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்ட ராமர் பாதம் மீனாட்சி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


இந்நிலையில், பிரதமர் அவர்கள் அறிவுரையின்படி, கும்பாபிஷேகப் பெருவிழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது. என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: 
 
''பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி
அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று நமது பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட  உள்ளது.
பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு   நரேந்திரமோடி அவர்கள், அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடக் கேட்டுக்கொண்டுள்ளார். 
 
மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவுரையின்படி, கும்பாபிஷேகப் பெருவிழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது. சென்னையில் இன்று, எனது இல்லத்தின் அருகில் வசிப்பவர்கள் இல்லங்களுக்கு நேரில் சென்று, ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கினோம். ஒரு ஒப்பற்ற பெருவிழாவாவில், அனைவரின் வருகையையும் பங்களிப்பையும் வேண்டுகின்றோம்''என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்