இக் கோவிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடப்பது வழக்கம். இதன்படி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியதையடுத்து, நாள்தோறும் தொடர்ந்து கருட வாகன சேவை, அனுமந்த வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், கஜலட்சுமி வாகனம், யானை வாகனம். புஷ்ப விமான வாகன ஊர்வலம், குதிரை வாகனம்உள்ளிட்ட வாகனங்களில் சாமி நகர்வலம் அழைத்து வரப்பட்டார்.
தேரோட்டத்தில் பூங்கரகம் எடுத்தும், காளை ஆட்டம், மயிலாட்டம் போன்றவை முன் செல்ல வாண வேடிக்கையுடன் திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.