இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும், விவிஐபிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் அறிவுரையின்படி, கும்பாபிஷேகப் பெருவிழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
இராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்று மசூதி, தர்கா, மதரசா உள்ளிட்ட இடங்களில் உள்ள இஸ்லாமியர்களும், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட வேண்டும் என்று கூறியுள்ளார்.