இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழக அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 5-வது இடத்தையும் கரூர் மாணவர் கார்வண்ண பிரபு பெற்றுள்ளார். இந்த மாணவனின் தந்தை கண்ணன் டாக்டராகவும், தாய் கெளசல்யா அரசு மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவராகவும் உள்ளார்.
மேலும், மாணவன்., கார்வண்ண பிரபு., நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் பிளஸ்-2 படித்தவர். இவர் 500-க்கு 476 மதிப்பெண் பெற்றிருந்தார். தற்போது நீட் தேர்வில் அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார்.
இது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை, தாயாரை போல, டாக்டராகி மக்களுக்குச் சேவை செய்வேன் என்றும், மனநல மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவராக சேவையாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.