தாம்பரம் - நாகர்கோயில் இடையே இன்று சிறப்பு ரயில்.. எத்தனை மணிக்கு கிளம்பும்?

Siva

புதன், 30 அக்டோபர் 2024 (07:48 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் படி, தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு ரயில் இன்று மதியம் 3.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக நாளை காலை 4.40க்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த ரயில் மறுமார்க்கத்தில் நாளை  காலை 8.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.55 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

அதேபோல, தாம்பரத்திலிருந்து மானாமதுரைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவாரூர், காரைக்குடி, சிவகங்கை வழியாக காலை 3.45 மணிக்கு மானாமதுரையை சென்றடையும். இந்த ரயில் மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் காலை 11.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.



Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்