தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்ட நிலையில் அதன் முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.
* சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில்: ஜனவரி 12, 19ம் தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (ரயில் எண் 06089) மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
* மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 13, 20ம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
திருநெல்வேலி - தாம்பரம்: * திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 12, 19,26ம் தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு சிறப்பு ரயில் (ரயில் எண் 06092) மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 13, 20, 27ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து (ரயில் எண் 06091) பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
தாம்பரம் - கன்னியாகுமரி
* தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு ஜனவரி 13ம் தேதி இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு சிறப்பு ரயில் (ரயில் எண் 06093) மறுநாள் பிற்பகல் 12:30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
* மறுமார்க்கமாக, இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 14ம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
ராமநாதபுரம் - தாம்பரம்
* ராமநாதபுரத்தில் இருந்து ஜனவரி 10, 12, 17ம் தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு சிறப்பு ரயில் (ரயில் எண்- 06104) மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 11, 13, 18ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5. 15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.
தாம்பரம் - திருச்சி: * தாம்பரத்திலிருந்து ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19ம் தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படும் ஜன்சதாப்தி அதிவிரைவு ரயில் (ரயில் எண் 06191) இரவு 11:35 மணிக்கு திருச்சி சென்றடையும்.
*மறுமார்க்கமாக, இந்த ரயில் அதே நாள்களில் திருச்சியில் இருந்து காலை 5:30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.