காஷ்மீர் குறித்து ஜெயலலிதா பேசியது என்ன? வைரலாகும் வீடியோ!!

செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (09:59 IST)
காஷ்மீர் பிரிக்கப்பட்டுள்ளது குறித்து மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
கடந்த 1984 - 1989 காலக்கட்டத்தில் மாநிலங்களவை எம்.பியாக ஜெயலலிதா இருந்து போது காஷ்மீர் குறித்து அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோ அவர் பேசியிருப்பதாவது,  
 
ஒரு மாநிலத்தின் அரசை மத்திய அரசு கலைக்க முற்படும் போது, ஆளுங்கட்சிக்கு நெருக்கடி உண்டாகும். ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக மோசமான செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  
குறிப்பாக 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, காஷ்மீரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், அதே ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டியின் போது, இந்திய வீரர்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. மேலும் பாகிஸ்தான் சிந்தாபாத் என்ற முழக்கங்களும் ஒலித்தன. 
 
இதுபோன்ற சம்பவங்கள் இந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் குலைக்கும் வகையில் இருக்கின்றன. எனவே, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான செயல்கள் அதிகரிக்கும் போது, அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். 
இறுதியாக மத்திய அரசிடம் சில கேள்விகள் இருக்கின்றன, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆளுநர் ஆட்சியின் கீழ் கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்குமா? ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் முழுமையாக இணைக்க, ஏன் இவ்வளவு தாமதம் ஏற்படுகிறது? அங்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையாக ஏன் அமல்படுத்தப் படவில்லை? என அந்த வீடியோவில் பேச்சியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்