ரெய்டை தடுத்த 10 எம்எல்ஏக்கள் உள்பட 564 பேர் மீது வழக்கு!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (08:43 IST)
லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக அதிமுகவினர் மீது வழக்கு பதிவு. 

 
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடுகளில் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வசிக்கும் இடங்களிலும் அதிரடியாக சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். 
 
இந்த சோதனையில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாகவும் இதனை அடுத்து வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. 
 
இதனிடையே முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரை வேலை செய்ய விடாமல் தடுத்ததாகவும், தகராறில் ஈடுபட்டதாகவும் 10 எம்எல்ஏக்கள் உள்பட 564 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்