26வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (08:11 IST)
பெட்ரோல் டீசல் விலைகள் கடந்த 25 நாட்களாக எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை ஆகி வரும் நிலையில் இன்று 26 வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தினந்தோறும் பெட்ரோல் விலை ஏறிக் கொண்டு வந்தது என்பதும் 100 ரூபாயை பெட்ரோல் விலை தாண்டி விட்டது என்பதும் 100 ரூபாயை டீசல் விலை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி 26 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை. கடந்த 25 நாட்களாக பெட்ரோல் விலை 102.49 ரூபாய் என்ற விலைக்கும் டீசல் விலை 94.39 என்ற என்ற விலைக்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்றும் அதே விலை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்