திமுக பிரச்சாரத்தை முறியடிக்க அதிரடி வாக்குறுதி கொடுத்த செளமியா.. தருமபுரியில் வெற்றி உறுதியா?

Siva

வியாழன், 11 ஏப்ரல் 2024 (15:41 IST)
தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி மனைவி சௌமியா வெற்றி உறுதி என்றும் எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்பதை தான் பார்க்க வேண்டும் என்றும் பாமகவினர் நம்பிக்கையாக உள்ளனர். 
 
மேலும் சௌமியா மற்றும் அவரது மகள்களின் பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் குறிப்பாக பெண்கள் வாக்குகள் மொத்தமாக சௌமியாவுக்கு விழும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் திமுக அதிரடியாக சௌமியா தனது குடும்பத்துடன் சென்னையில் தான் இருக்கிறார், அவர் வெற்றி பெற்று எம்பி ஆகிவிட்டால் தர்மபுரி பக்கமே வர மாட்டார் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பிரச்சாரம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் எடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தான் திடீரென அதிரடியாக சௌமியா நான் சென்னை வீட்டை காலி செய்துவிட்டு தர்மபுரிக்கே குடி வந்து விடுவேன் என்றும் நான் எம்பி ஆகிவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகள் தர்மபுரியில் தான் இருப்பேன் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளார். 
 
இதனை அடுத்து மீண்டும் சௌமியா பக்கம் காற்று வீசத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தர்மபுரி தொகுதியை பொருத்தவரை பாஜக கூட்டணிக்கு ஒரு வெற்றி நிச்சயம் என்ற நிலை தான் உள்ளதாக அந்த பகுதியில் உள்ள அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்