தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. மாலையில், சவரனுக்கு மேலும் ரூ. 200 உயர்ந்ததால், நகை வாங்க திட்டமிட்டவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று மாலையில் வெளியிடப்பட்ட நிலவரப்படி, ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் விலை ரூ. 91,400-ஆக உயர்ந்துள்ளது. இது இன்று காலையில் இருந்த ரூ. 91,200-ஐ விட ரூ. 200 அதிகம். அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ. 11,400-இல் இருந்து ரூ. 11,425-ஆக உயர்ந்துள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 177-ஆக உள்ளது. இது காலை விலையை விட கிராமிற்கு ரூ. 6 உயர்வு ஆகும். இதன் மூலம், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 1,77,000-ஆக உள்ளது. தொடர்ச்சியான இந்த விலை உயர்வு, பண்டிகைக் காலங்கள் நெருங்கும் நிலையில், நகை வாங்குவோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.