தென்மேற்கு பருவமழை திட்டமிட்ட நாளுக்கு முன்னதாகவே தொடங்க உள்ளதால் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் நடந்து வந்த போதும் ஆங்காங்கே பெய்த கனமழையால் சில்லென்ற சூழல் நிலவியது. வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டு அளவுக்கு உயராமல் மழை பார்த்துக் கொண்ட நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழைக் காலமும் தொடங்க உள்ளது. இதனால் வெப்பநிலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை 27ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே மழை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அடுத்த 4 அல்லது 5 நாட்களில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழைப்பொழிவு இருக்கும்.
மத்தியக் கிழக்கு அரபிக் கடலில் இன்று புதிய வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளதாகவும், இது நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து வலுவடையக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K