மே 21 முதல் தென்மேற்கு பருவமழை? சென்னை வானிலை மையம்

புதன், 19 மே 2021 (12:44 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவ நிலையை தொடங்கும் என்ற நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தென்மேற்கு பருவமழை மே 21-ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனை அடுத்து தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் மே 21-ஆம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது
 
கேரளா மற்றும் தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் மே இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது என்ற செய்தி இருமாநில விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியான ஒன்றாக உள்ளது. அது மட்டுமின்றி நீர்நிலைகளில் தண்ணீர் தற்போது குறைந்து வரும் நிலையில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு என்ற தகவல் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒன்றாக கருதப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்