மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள திருவள்ளுவர் சிலை அருகே, தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில், நிறுவனத் தலைவர் திருமாறன் அறிவுறுத்தளின்படி, மாநில பொதுச்செயலாளர் சபரி, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ராஜா மாறன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு மண்ணுரிமைக் கட்சி பொதுச்செயலாளர் முகமது தாரிக், இந்து மகா சபா தலைவர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனால் ,பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் என்பது அதிகரித்துள்ளது .