மாநாடு படம் ஒரே ஒருவருக்குதான் பிடிக்கவில்லை… மேடையில் கலாய்த்த வெங்கட்பிரபு!

வியாழன், 23 டிசம்பர் 2021 (10:09 IST)
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இயக்குனர் வெங்கட்பிரபு கடைசியாக கொடுத்த ஹிட் என்றால் அது மங்காத்தாதான். அதன் பின்னர் அவருக்கு மிகப்பெரிய ஹிட் அமையவில்லை. அதைப் போக்கும் விதமாக மாநாடு திரைப்படம் அமைந்தது. வசூல் ரீதியாக மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் வழக்கம் போல இணையத்தில் விமர்சனம் செய்யும் ப்ளு சட்ட மாறன் மட்டும் படத்தைக் கலாய்த்து இருந்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு ‘படம் அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் ப்ளு சட்ட மாறனுக்கு மட்டும் பிடிக்கவில்லை. ஆனால் அவருக்கும் சேர்த்து ரசிகர்களிடம் கொண்டு சென்ற ஊடகங்களுக்கு நன்றி’ எனக் கூறி கைத்தட்டலை அள்ளினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்