ஜல்லிக்கட்டில் ‘ஜாதி’யை திணிக்கும் சில குள்ளநரி கூட்டங்கள்!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (15:06 IST)
தமிழகமெங்கும் தீவிரமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை சிலர் ஜாதிய விஷயங்களை வன்மமாக திணித்து வருகின்றனர்.


 

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்ட உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.


 

மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு என தொடங்கிய இந்த போராட்டம் தமிழகமெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து சென்று வருகின்றனர்.

மேலும், பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், சிலர் சமூக வலைத்தளங்களில் ஜாதிப் பெயர்களை சொல்லி கொச்சைப்படுத்தி வருகின்றனர். சிலர், ஜல்லிக்கட்டு குறிப்பிட்ட ஜாதியினருக்கே சொந்தம் என்கிற ரீதியிலும், ஒரு சிலர் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஒற்றுமையை வலியுறுத்தியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்