கம்ப்யூட்டர் வெடித்ததில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் பரிதாப பலி

வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (08:40 IST)
மதுரையை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் கம்ப்யூட்டர் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அனுமர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரகுனாதன். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர், தனது தந்தை கடந்த வருடம் உயிரிழந்ததையடுத்து, இவர் மேலூரில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார். 
 
நேற்று ரகுனாதன் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென கம்ப்யூட்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் ரகுனாதன் தூக்கி வீசப்பட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டினர் ரகுனாதனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரகுநாதன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்