இளநிலை பாடப்பிரிவுகளில் சமூக நீதிப்பாடம்: இந்தாண்டு முதல் அமல் என அறிவிப்பு!

Webdunia
திங்கள், 16 மே 2022 (11:30 IST)
இளநிலை பாடப்பிரிவுகளில் சமூக நீதிப்பாடம் இந்தாண்டு முதல் அமல்படுத்தப்படும் என சென்னை பல்கலை. துணை வேந்தர் கெளரி அறிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
 
பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும், இளநிலை பாடப்பிரிவுகளில் சமூக நீதிப்பாடம் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. முதலமைச்சரின் சமூகநீதி நாள் அறிவிப்பின் தொடர்ச்சியாக இது அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 
மேலும் எந்த முனைவர் பட்டம் பெற்றாலும், அவர்களது ஆய்வு கட்டுரை சுருக்கத்தை 10 பக்கங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யவேண்டும். இதன் மூலம் தமிழ் ஆர்வலர்கள் அதுகுறித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இனி இது சென்னை பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என சென்னை பல்கலை. துணை வேந்தர் கெளரி தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்