கரூர் அருகே பாம்பு வேட்டை

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2016 (09:05 IST)
கரூர் அருகே பாம்பு வேட்டையில் பல்வேறு வகைகளைச் சேர்ந்த 156 பாம்புகள் சிக்கியது.
 

 
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே புகளூரில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான காகித தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் பாம்புத் தொல்லை அதிக அளவில் உள்ளது என அங்கு வசிக்கும் மக்கள் புகார் செய்தனர்.
 
இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரத்தை சேர்ந்த இருளர்கள் பாம்பு பிடிக்கும் கூட்டுறவு சங்க துணை தலைவர் ஜெயக்குமார் தலைமையில் 11 பேர் கொண்ட ஒரு குழுவினர் காகித ஆலை மற்றும் குடியிருப்பு பகுதியில் பாம்பு வேட்டை நடத்தினர்.
 
இதில் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என விஷப்பாம்புகள் உள்ளிட்ட 156 பாம்புகளையும் பிடித்தனர்.
 
இந்த பாம்புகளை நாமக்கல் மாவட்ட வன அலுவலகம் மூலம், கொல்லிமலை காப்புக்காடு பகுதியில் கொண்டுபோய்விட்டனர். இதனால் சுதந்திரமாக சுற்றிச்திரிய பாம்புகள் கொல்லிமலை காட்டுக்குள் சீறிப்பாய்ந்தது.
 
அடுத்த கட்டுரையில்